திருப்பூர்

காங்கயத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

DIN


காங்கயம்: இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கும் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் உள்ள மதர் தெபொராள் பள்ளியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகமும், வீடு தேடி வரும் திட்டப் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகத்தையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சிப் பகுதியில் 31 பயனாளிகள், வெள்ளகோவில் நகராட்சிப் பகுதியில் 9 பயனாளிகள், குண்டடம் ஊராட்சிப் பகுதியில் 2 பயனாளிகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

சிவன்மலையில்.. இதன் பின்னர், காங்கேயம் காளை சிலைகளுடன் அமைக்கப்பட்ட நுழைவுவாயிலுடன் கூடிய 4.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிவன்மலை ஊராட்சி மன்றக் கட்டடத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். சிவன்மலை ஊராட்சி அலுவலகம் அருகே, சிவன்மலை பகுதியில் சேகரமாகும் மழைநீரை குழாய்கள் மூலம் குளத்தில் சேகரித்து இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் கிராம ஊராட்சிப் பொது நிதியில் இருந்து ரூ.9.76 லட்ச மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கனிமம் மற்றும் சுரங்கம் சிறுவகை கனிமம் திட்டத்தின் கீழ் ரூ.6.85 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கழிவு நீரை மறுசுழற்சி செய்து, நீர்த் தேக்கத்தொட்டி அமைத்து, மின் மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

மேலும், பரஞ்சேர்வழி ஊராட்சியில் 88 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணக்குமார், காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமி, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித் தலைவர் கே.கே.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: காங்கயத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில்  ஊட்டச் சத்துப் பெட்டகம் வழங்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

அன்னையரைப் போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT