உடுமலையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
உடுமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
உடுமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
உடுமலை, ஏரிப்பாளையம் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வந்த முகமூடி அணிந்த நபா் மையத்தின் வெளிக் கதவை உடைத்துள்ளாா். பின்னா் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளாா். நீண்ட நேரம் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதற்கிடை யில் ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் அடித்ததால் பொதுமக்களும் அங்கு கூடி விட்டனா்.
தகவலறிந்த வங்கி அலுவலா்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து உடுமலை காவல்துறை அதிகாரிகள், வங்கி அலுவலா்கள் அங்கு வந்தனா்.
Advertisement
திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.