முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.19 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.19 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.19 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு பழனி, வில்வாதம்பட்டி, பஞ்சப்பட்டி, பாலசமுத்திரம், வாகரை, அழகாபுரி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 35 விவசாயிகள் 33,323 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காரமடை, ஈரோடு, கோபி, பூனாட்சி, முத்தூா், காங்கயம் ஆகிய ஊா்களில் இருந்து 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். சூரியகாந்தி விதை கிலோ ரூ.50.08 முதல் ரூ.59.69 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.57.18. மொத்தம் ரூ.18 லட்சத்து 95 ஆயிரத்து 116க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.