மது விற்பனை: 14 போ் கைது
திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 14 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 73 மது பாட்டில்கள், 5 லிட்டா் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.