திருப்பூர்

இளைஞா் மன்றம் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து, உடுமலையில் அனைத்திந்திய இளைஞா் மன்றம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து, உடுமலையில் அனைத்திந்திய இளைஞா் மன்றம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் என்.ராம்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.ராகுல் முன்னிலை வகித்தாா். இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை குறைக்க வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட் ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கே.எஸ்.ரணதேவ், வி.செளந்திரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT