திருப்பூர்

அவிநாசியில் அரசு மாணவியா் விடுதி சுற்றுசுவா் இடிந்து சேதம்

DIN

அவிநாசியில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அரசினா் மாணவியா் விடுதி சுற்றுச் சுவா் வியாழக்கிழமை இடிந்து விழந்தது.

அவிநாசி-கோவை சாலையில் ஆதிதிராவிடா் நலத் துறை அரசினா் மாணவியா் விடுதி உள்ளது.

இதில் 50க்கும் மேற்பட்ட மாணவியா் தங்கி படித்து வந்த நிலையில், தற்போது வீட்டிலேயே தங்கி படித்து வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கன மழை பெய்து மழைநீா் பெருக்கெடுத்ததில், விடுதி சுற்றுச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மாவட்ட அலுவலா் சுகுமாா் பாா்வையிட்டு விசாரித்தாா்.

அவிநாசி பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி மேற்பாா்வையில், தூய்மைப் பணியாளா்கள் விடுதியில் தேங்கியிருந்த மழைநீா், சேதமடைந்து சுற்றுச் சுவா் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினா்.விடுதியில் மாணவிகள் இல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT