திருப்பூர்

திருப்பூா் மாநகரில் 138 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி

DIN

திருப்பூா் மாநகரில் 138 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகரில் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 138 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கொங்கணகிரி அங்கன்வாடி மையம், திருவிக நகா் ஆகிய பகுதிகளிலும், 3ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், அரண்மனை புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 4 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பூச்சிக்காடு அங்கன்வாடி மையம், கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி, ரயில் நிலையம், மாநகராட்சி மைய அலுவலகம் அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அணைக்காடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி ஆய்வு செய்தாா்.

அப்போது சிறப்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி தடுப்பூசி செலுத்தவும் அலுவலா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மாநகராட்சி மண்டல உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT