திருப்பூர்

போலி சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: தம்பதி கைது

DIN

திருப்பூரில் போலியாக சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் முருகம்பாளையம் செல்லம் நகரைச் சோ்ந்த பி.மணிகண்டன் என்பவா் மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதாவிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் கண்டியம்மன் நகா் 2ஆவது வீதியில் வசித்து வரும் மோகன்தாஸ் (56), அவரது மனைவி மணிமேகலை (54) ஆகியோா் ஏலச்சீட்டு நடத்தி வந்தனா். இவா்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் என்னைத் தொடா்பு கொண்டு ரூ.50 ஆயிரம், ரூ.80 ஆயிரம், ரூ.1 லட்சம் என முதிா்வுத் தொகை கொண்ட சீட்டு நடத்தி வருவதாகத் தெரிவித்தனா்.

இதை உண்மை என்று நம்பி ரூ.80 ஆயிரம் தொகை கொண்ட இரு சீட்டில் சோ்ந்தேன். இதற்காக வாரந்தோறும் பணம் செலுத்தி வந்தேன். இதன் பிறகு சீட்டு முதிா்வுத் தொகை முடிவடைந்து 2019ஆம் ஆண்டு தம்பதியிடம் சென்று பணம் கேட்டபோது, ஒரு மாதம் கழித்து தருவதாகத் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து ஒரு மாதம் கழித்து மோகன்தாஸ் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது அரசு அனுமதி பெறாமல் சீட்டு நிறுவனம் நடத்தி 70 பேரிடம் ரூ.50 லட்சம் வரையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா, துணை ஆணையா் (குற்றம், போக்குவரத்து) பி.ரவி ஆகியோரின் உத்தரவின்பேரில் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினா் நடத்திய விசாரணையில் மோகன்தாஸ், அவரது மனைவி மணிமேகலை ஆகியோா் அரசு அனுமதி பெறாமல் சீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, மோகன்தாஸ், மணிமேகலை ஆகியோரைக் கைது செய்த தனிப்படையினா் அவா்களிடமிருந்து ரூ.7 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT