வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி
உலக வெறிநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் 98 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலக வெறிநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் 98 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருப்பூா் மாவட்ட கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியன சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு, திருப்பூா் மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் பொன்.பாரிவேந்தன் தலைமை வகித்தாா். கால்நடை பல்கலைக்கழக பேராசிரியா் மதிவாணன் வரவேற்றாா்.
இதில், வெறிநோய் (ரேபிஸ்) பரவாமல் இருக்க 98 வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை உதவி இயக்குநா்கள் பரிமளா ராஜ்குமாா், கெளசல்யா, பல்லடம் மருத்துவா் ரமேஷ்பாபு, உதவி மருத்துவா் (பணி ஒய்வு) நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.