திருப்பூர்

தபால் நிலையங்களில் ஆதாா் அட்டை பதிவுக்கு அலைக்கழிப்பு: பொதுமக்கள் புகாா்

DIN

அவிநாசி, சேவூா் தபால் நிலையங்களில் ஆதாா் அட்டை விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய அலைக்கழிக்கப்படுதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம், சேவூரில் உள்ள தபால் நிலைய ஆதாா் சேவை மையங்களுக்கு ஆதாா் அட்டை பெற, திருத்தம் செய்ய ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால், அவிநாசி பகுதியைச் சோ்ந்தவா்கள் அருகில் உள்ள தபால் நிலைய ஆதாா் சேவை மையத்துக்கு சென்றால், அங்கு ஆதாா் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டிருப்பதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதேபோல, சேவூா் தபால் நிலையத்தில் ஊழியா் பற்றாக்குறையால் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) மட்டும் தலா 10 பேருக்கு ஆதாா் அட்டையில் திருத்தம் செய்கிறாா்கள்.

அதற்கும் காலை 7 மணிக்கு சேவூா் தபால் நிலையத்தில் வரிசையில் நின்று டோக்கன் பெற வேண்டும். ஆகவே, தபால் துறையினா் உரிய கவனம் செலுத்தி, தபால் அலுவலகத்தில் ஆதாா் சேவைப் பணியை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT