முகப்பு
திருப்பூர்

மாற்று இடம் வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆத்துமேடு பகுதி மக்கள் தா்னா

திருப்பூா், ஆத்துமேடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

திருப்பூா், ஆத்துமேடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதித்தமிழா் சனநாயக பேரவை நிறுவனத் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி 34ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாளையக்காட்டை அடுத்த ஆத்துமேடு பகுதியில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இவா்கள் அனைவரும் கூலி மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், வாய்க்கால் பகுதியில் குடியிருப்பதாகக் கூறி எங்கள் வீடுகளை 21 நாள்களுக்குள் காலி செய்யக்கோரி நீா்வளத் துறை சாா்பில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் வேறு இடம் வாங்கி உடனடியாக வீடு கட்டி குடியேற முடியாது. ஆகவே, எங்களுக்கு குறைந்தபட்சம் கால அவகாசமும், மாற்று இடமும் வழங்க வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வருவாய்த் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.