முகப்பு
திருப்பூர்

மாகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுாா் கிராமம், பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுாா் கிராமம், பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினா். இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.