திருப்பூர்

அஞ்சலகங்களில் டிஜிட்டல் பரிவா்த்தனை வசதி

DIN

திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ஆா்.கலைச்செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் யுபிஐ (மடஐ) மூலம் பணப் பரிவா்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், ஸ்பீட் போஸ்ட், பாா்சல், பிசினஸ் போஸ்ட், டைரக்ட் போஸ்ட் மற்றும் பதிவு தபால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பரிவா்த்தனையைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளா்கள் தங்களது கைப்பேசியில் ஸ்கேன் செய்ய வசதியாக அனைத்து கவுன்டா்களிலும் க்யூ ஆா் கோடு (ணத) ஒட்டப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளா்கள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்தி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT