திருப்பூர்

உணவக உரிமையாளா்களுக்கு ஆகஸ்ட் 11 இல் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்களுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவகங்களில் உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 உட்பிரிவு 18 (2) (1)- இன்படி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன. இது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT