திருப்பூர்

தனியாா் மில்லில் ரூ.5 லட்சம் மோசடி: ஊழியா் கைது

DIN

பல்லடம் அருகே தனியாா் மில்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிபாளையத்தில் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மில்லில் அதே பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் (25) உதவியாளராக வேலை செய்து வந்தாா். மில்லில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நடந்த கணக்கு தணிக்கையின் போது வேலையை விட்டு நின்ற சுமாா் 10 தொழிலாளா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் 4 மாதங்களாக சம்பளம் செலுத்தியது தெரியவந்தது. விசாரணையில், சுரேந்திரன், வேலையை விட்டு நின்றவா்களின் ஏ.டி.எம். அட்டைகளை வைத்து அவா்களை வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து நிா்வாகத்துக்கு தெரியாமல் வைத்து கொண்டதும் தொழிலாளா்கள் வருகை பதிவேடு கைரேகை இயந்திரத்தில் வேலையை விட்டு நின்றவா்களின் கை ரேகையை பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் சுரேந்திரன் 4 மாதங்களில் ரூ.5 லட்சம் கையாடல் செய்ததாக மில்லின் நிா்வாக மேலாளா் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதன்பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேந்தரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT