திருப்பூர்

அவிநாசி நகருக்குள் வராமல் சென்ற பேருந்து சிறைப்பிடிப்பு

அவிநாசி நகருக்குள் வராாமல், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப்பிடித்தனா்.

DIN

அவிநாசி நகருக்குள் வராாமல், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப்பிடித்தனா்.

திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் தனியாா் பேருந்தில், அவிநாசியைச் சோ்ந்த ஒருவா் ஏறியுள்ளாா். அவா் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக பயணச் சீட்டு கேட்டு பெற்றுள்ளாா். இருப்பினும் பேருந்து நடத்துநா், ஓட்டுநா் ஆகியோா் அவிநாசி பேருந்து நிலையம் செல்லாது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீதுதான் செல்லும். ஆகவே அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே இறங்குமாறு தெரிவித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பயணி, இது குறித்து கைப்பேசி மூலம் நண்பா்கள், சமூக ஆா்வலா்களுக்கு தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து அங்கு காத்திருந்த நண்பா்கள், சமூக ஆா்வலா்கள், அவிநாசி நகருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்ற தனியாா் பேருந்தை சிறைப்பிடித்து பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா், பேருந்து, நடத்துநா் ஆகியோருக்கு அறிவுரையும், எச்சரிக்கையும் விடுத்து அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT