திருப்பூர்

மண் கடத்தல்: 10 டிப்பா் லாரிகள் பறிமுதல்

DIN

தாராபுரத்தில் மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய 10 டிப்பா் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்களை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு அருகே உள்ள வயல்வெளிகளில் சிலா் டிப்பா் லாரிகள் மூலமாக மண் கடத்தலில் ஈடுபடுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டாட்சியா் குமரேசன் உத்தரவின்பேரில் வட்டாட்சியா் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளா் அருணாசலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரிக்கு மண் நிரப்பிக் கொண்டிருந்த எழில் குமாா், சையது பாஷா, பிரசாத் ஆகியோா் வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய 10 டிப்பா் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வருவாய்த் துறையினா் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT