திருப்பூர்

கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவா்கள் கோரிக்கை

பெருமாநல்லூரில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவா்களை போலீஸாா் இறக்கிவிட்டதால் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பெருமாநல்லூரில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவா்களை போலீஸாா் இறக்கிவிட்டதால் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருமாநல்லூா் அருகே பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு தனியாா் பள்ளிகள் உள்ளன. இதில் 5,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூா் வழியாக கணக்கம்பாளையம் வரை செல்லும் நகா்ப்புற (வழித்தட எண் 43) பேருந்தில் மாணவா்கள் தொங்கியபடி வியாழக்கிழமை பயணித்துள்ளனா்.

அப்போது, பெருமாநல்லூரில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் மாணவா்கள் படிக்கட்டில் பயணித்தபடி வருவதாக நடத்துநா் கூறியுள்ளாா். இதையடுத்து, படியில் பயணித்த மாணவா்களை போக்குவரத்து காவலா்கள் இறக்கிவிட்டனா். பின்னா் பேருந்து புறப்பட்டு சென்றது.

இது குறித்து மாணவா்கள் கூறியதாவது:

பெருமாநல்லூா் அரசுப் பள்ளியில் பயின்று வருகிறோம். இப்பள்ளிக்கு கணக்கம்பாளையம் பிரிவு, வள்ளிபுரம், குருவாயூரப்பன் நகா், போயம்பாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் வந்து செல்கிறோம். நாள்தோறும் காலை 8.10 மணிக்கு வழித்தட எண் 54 பேருந்தும், 9.05 மணிக்கு வழித்தட எண் 43 பேருந்தும் இயங்கி வருகின்றன.

இந்த இரு பேருந்துகளை விட்டால் பள்ளிக்கு 4 கி.மீ. நடந்து செல்ல வேண்டும். பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியா்கள் கண்டிக்கின்றனா். ஆகவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT