அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். 
திருப்பூர்

அவிநாசி: வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளர் மோகன் பாபு லஞ்சம் கேட்பதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில்

DIN

அவிநாசியில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளர் மோகன் பாபு லஞ்சம் கேட்பதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் அவிநாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மோகன்பாபு.

இவர் பொதுமக்கள், விவசாயிகளில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான விவசாயிகள், அலுவலரைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளவரசியின் காதல்...

நன்றி சொல்வோம்...

சிட்டுக்குருவிகளைக் காப்போம்!

தாகம் தீர்க்கும்...

பண மோசடி: மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயில் அறங்காவலா் நிரந்தர நீக்கம்!

SCROLL FOR NEXT