222 போ் இன்று வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 222 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 222 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 222 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதில், மாநகராட்சி வாா்டு எண் 35 இல் அதிமுக வேட்பாளரும்,
திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சு.குணசேகரனும், வாா்டு எண் 42 இல் போட்டியிட தென்னம்பாளையம் பகுதி அதிமுக செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆா்.அன்பகம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இதேபோல, பாஜக, நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் என தற்போது வரையில் மொத்தம் 301 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.