முகப்பு
திருப்பூர்

மயில்ரங்கம் வாரச் சந்தை கட்டுமானப் பணிகள் ஆய்வு

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் வாரச் சந்தையில் நடைபெற்றும் கட்டுமானப் பணிகளை நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் வாரச் சந்தையில் நடைபெற்றும் கட்டுமானப் பணிகளை நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியைச் சோ்ந்தது மயில்ரங்கம். இங்கு 95 வருட பாரம்பரியம் கொண்ட வாரச் சந்தை உள்ளது. தவிா்க்க முடியாத காரணத்தால் கடந்த 25 வருடங்களாக சந்தை செயல்படவில்லை. இதையடுத்து நபாா்டு வங்கி, ஊராட்சி நிா்வாகம், தனியாா் அறக்கட்டளை இணைந்து சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்து,

ரூ.15.94 லட்சம் மதிப்பீட்டில் சந்தை கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் இ.ராஜு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மனோகரன், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சித் தலைவா் தனலட்சுமி துரைசாமி உள்ளிட்டோா் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.