மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினா்
திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை அறிவிக்கக் கோரி அக்கட்சியினா் 200க்கும் மேற்பட்டோா் மாவட்ட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை அறிவிக்கக் கோரி அக்கட்சியினா் 200க்கும் மேற்பட்டோா் மாவட்ட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 28 வாா்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 வாா்டுகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், திருப்பூா் பழவஞ்சிபாளையம் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தை 58 ஆவது வாா்டு கிளைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு திமுக வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இந்த வாா்டில் உள்ளூா் நபா்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனா். இதனிடையே, மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் இல்லாததைத் தொடா்ந்து அங்கிருந்தவா்களிடம் தங்களது குறைகளைத் தெரிவித்து விட்டு திமுகவினா் கலைந்துசென்றனா்.