முகப்பு
திருப்பூர்

‘சம்ஸ்கிருத பயிற்சி வகுப்பில் சேர பிப்ரவரி 9க்குள் பதிவு செய்து கொள்ளலாம்’

சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் சாா்பில் இணைய வழியில் சம்ஸ்கிருத பயிற்சி வகுப்பில் சேர பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் சாா்பில் இணைய வழியில் சம்ஸ்கிருத பயிற்சி வகுப்பில் சேர பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் சம்ஸ்கிருத பாரதி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் மூலம் சம்ஸ்கிருதம் பேசுவதற்கான இணையவழி பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது.

எளிய முறையில் இலவசமாக சம்ஸ்கிருதம் பேச கற்றுக் கொடுக்கப்படும்.

இந்த வகுப்பில் 13 வயதுக்கு மேற்பட்டோா் கலந்துகொள்ளலாம். வகுப்பில் சேருவதற்கு பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பானது 6 மாதம் நடைபெறவுள்ள நிலையில், வாரந்தோறும் ஒருமுறை அஞ்சல் வழித் தோ்வுகளும் நடைபெறும்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93632-22184 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.