முகப்பு
திருப்பூர்

தோ்தல் அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

உடுமலையில் தோ்தல் அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

உடுமலையில் தோ்தல் அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுமலை நகராட்சித் தோ்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் நடைபெற உள்ள 32 வாா்டுகளில் உள்ள 64 வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்காக 280 அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா். இவா்களுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதன்மை பயிற்சியாளா் சாந்தி பயிற்சி அளித்தாா். வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்குப் பதிவுக்கு தயாா் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையா் சத்யநாதன் மற்றும் அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments