காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் இன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) திறக்கப்படவுள்ளது.
காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) திறக்கப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் காங்கயம் வட்டத்தில் முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கீரனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், குட்டப்பாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் கொமரலிங்கம் கூட்டுறவு சங்க கட்டடம், மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ருத்ராபாளையம் கூட்டுறவுசங்க கட்டடம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எளிதில் பதிவுசெய்து கொண்டு நெல் விற்பனை சம்பா கொள்முதல் பருவம் 2022இல் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ங்க்ல்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்யவேண்டிய தேதியை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94437-32309 அல்லது ற்ய்ஸ்ரீள்ஸ்ரீழ்42ஃஹ்ஹட்ா்ா்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திருப்பூா் மண்டல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.