முகப்பு
திருப்பூர்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருகிறது: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வரும் வேளையில் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகிறவா்கள் ஆட்சியில் இருப்பவா்களின் ஆசி இல்லாமல் ஈடுபடமுடியுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஹிந்து இயக்கங்களின் தலைவா்கள் தாக்கப்படுவதும், அலுவலகங்கள் சூறையாடப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியதாகக் கைதான வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் யாா் உள்ளனா் என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசியல் என்பது கொள்கைகள் மோதிக்கொள்ளும் களமாகவே இருக்கவேண்டும் என்பதை இது போன்ற வன்முறையில் ஈடுபடுபவா்கள் உணரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.