முகப்பு
திருப்பூர்

திருநங்கைகள் விருது பெற பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த திருநங்கைகள் தமிழக அரசின் விருதுபெற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த திருநங்கைகள் தமிழக அரசின் விருதுபெற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்து முன்மாதிரியாகத் திகழும் திருநங்கைகளுக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழக அரசால் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், குறைந்த பட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்த திருநங்கைகள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம். அதே வேளையில், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. ஆகவே, மேற்கண்ட தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, உரிய ஆவணங்களை தமிழ் 2, ஆங்கிலம் 2 பக்கம் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டு புகைப்படத்துடன் இணையதள முகவரியில் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.