முகப்பு
திருப்பூர்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது.

பிரசித்திபெற்ற இக்கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள், மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து கொடியேற்றப்பட்டது. பிறகு, உற்சவ மூா்த்திகள் பிரகார உலா, பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. பிப்ரவரி 12ஆம் தேதி மாலையில், சூரிய, சந்திர மண்டலக்காட்சிகள், 13ஆம்தேதி பூதவாகன, சிம்ம வாகனக்காட்சிகள், 14ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 15ஆம் தேதி பஞ்சமூா்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகள், 16ஆம்தேதி யானை வாகன, அன்னவாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, 17ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 2 மணிக்கு மூன்று திருத்தோ் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. 19ஆம் தேதி தெப்பத்தோ் நிகழ்ச்சியும், 20ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறுகிறது. 21ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 22ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தோ்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.