முகப்பு
திருப்பூர்

நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறு பொதுமக்கள் அவதி

நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருப்பூா் வடக்கு மாநகர பகுதிக்குள்பட்ட போயம்பாளையம், செட்டிபாளையம் , ஏ.எஸ்.எம் காலனி நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியவில்லை. 3 நாள்களாக இப்பிரச்னை நீடிப்பதால், வேலைகளை விட்டுவிட்டு வந்த பொதுமக்கள் அலைச்சலுக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.