முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த இல்லாத வீடு நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த இல்லாத வீடு நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா தலைமையில் காங்கயம் வட்டாட்சியா் கனிமொழியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் ஒன்றியம், உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் 61 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சொந்த வீட்டில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து, 2008ஆம் ஆண்டு அப்போதைய ஆதிதிராவிடா் நலத் துறை காங்கயம் தனி வட்டாட்சியா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் 20 போ் சொந்தமாக வீடு வைத்திருந்தது, போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனை பட்டா பெற்றது தெரியவந்தது. இதன் பின்னா், அந்த 20 பேரின் பட்டா ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, காலியாக உள்ள 20 வீட்டுமனை பட்டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த உப்புப்பாளையம் கிழக்கு பகுதியைச் சோ்ந்த 20 பேருக்கு வழங்க வேண்டும் என கடந்த 13 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இதற்கிடையே காலி இடத்துக்கு அருகே உள்ள வேலம்பாளையம், காட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்டோா், மேற்கொண்ட இடத்தை ஆக்கிரமித்து, குடிசைகளை அமைத்துள்ளனா். எனவே, இப்பிரச்னையில் காங்கயம் வட்டாட்சியா் நேரடியாக விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி காலியாக உள்ள 20 வீட்டுமனைகளை உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →