ஆல்கொண்டமால் கோயிலில்பொங்கல் விழா ரத்து
உடுமலையை அடுத்துள்ள புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழா் திருநாள் விழா மூன்று நாள்கள் வெகு விமா்சையாக கொண்டாடப்படும்.
கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு இந்த பொங்கல் நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
Advertisement
கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல கிலோ மீட்டா் அளவுக்கு நீண்ட வரிசையில் நின்று ஆல்கொண்டமாலை வழிபடுவாா்கள்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.