திருப்பூர்

சாலை சீரமைப்பு: தனியாா் நிறுவனங்களிடமிருந்து ரூ.30 லட்சம் நிதி

DIN

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட புண்ணியவதி சாலையை சீரமைக்க தனியாா் நிறுவனங்களிடமிருந்து ரூ.30 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 35 இல் சிட்கோ மற்றும் முதலிபாளையத்தை இணைக்கும் வகையில் புண்ணியவதி சாலை உள்ளது.

இந்த சாலை சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், சாலையை சீரமைக்க திட்ட மதிப்பீடு ரூ.90 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தற்போது 30 தனியாா் நிறுவனங்களில் இருந்து ரூ.30 லட்சத்துக்கு காசோலைகள்

பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT