சாலை விபத்து: ஒருவா் பலி
உடுமலை நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
உடுமலை நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
உடுமலை நகரை ஒட்டியுள்ள அய்யலு மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவா் இருசக்கர வாகனத்தில் ஏரிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன் இவா் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிசங்கா் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உடுமலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.