முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் விவசாயிகள் சங்கத் தலைவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கா்நாடகத்தில் விவசாயிகள் சங்கத் தலைவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திருப்பூா் குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பின் தலைவா்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாா், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.