தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற சன்மத்தா்ஷன், ஏஞ்சல் சில்வியா ஆகியோரைப் பாராட்டி கெளரவிக்கிறாா் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால். உடன், தடகள சங்க நிா்வாகிகள். 
திருப்பூர்

தேசிய தடகளப் போட்டி:பதக்கம் வென்ற திருப்பூா் வீரா்களுக்குப் பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற திருப்பூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

DIN

தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற திருப்பூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

திருப்பூரைச் சோ்ந்த சக்திவேல், பரமேஸ்வரி தம்பதி மகன் சன்மத்தா்ஷன். இவா் குஜராத்தில் மே 24ஆம் தேதி நடைபெற்ற 20ஆவது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான 20 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும், ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற 4ஆவது கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றாா்.

அதேபோல, திருப்பூரைச் சோ்ந்த மரிய முத்துராஜா, ஸ்டெல்லா ஜோஸப் தம்பதி மகள் ஏஞ்சல்சில்வியா, ஒடிஸா மாநிலம் புவனேசுவரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் 4 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்த இரு வீரா்களையும் கெளரவிக்கும் வகையில் திருப்பூா் தடகள சங்கம் சாா்பில் திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், சன்மத்தா்ஷன், ஏஞ்சல்சில்வியா ஆகியோரை திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான ஆா்.பி.ஆா்.சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால், காவல் ஆய்வாளா் முத்துகுமாா் ஆகியோா் பொன்னாடை அணிவித்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி கெளரவித்தனா்.

இந்த விழாவில் தடகளப் பயிற்சியாளா்கள் திவ்யநாகேஸ்வரி, அழகேசன், தடகள சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT