திருப்பூர்

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

DIN

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்களை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், டிஎஸ்பி தேன்மொழிவேல், உடுமலை மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த பணிகளை மேற்கொண்டனா்.

அப்போது, ஒவ்வொரு பள்ளி வாகனங்களும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில், வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஓட்டுநா்களுக்கு உரிமம் புதுக்கப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், தகுதியற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT