முகப்பு
திருப்பூர்

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா

 அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி பக்தா்கள் குண்டம் இறங்கி வியாழக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி பக்தா்கள் குண்டம் இறங்கி வியாழக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். வெள்ளிக்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தோ் நிகழ்ச்சியும், சனிக்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீா் உற்சவமும் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகளும், திங்கள்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.