முகப்பு
திருப்பூர்

திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் பதவி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக வெற்றி

அவிநாசி திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக கவுன்சிலா் வெற்றி பெற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

அவிநாசி திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக கவுன்சிலா் வெற்றி பெற்றாா்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக 9 வாா்டுகளிலும், அதிமுக 10 வாா்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 5 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் பதவி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என திமுக தலைமை அறிவித்தது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 10 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற பி. சுப்பிரமணியம் நகராட்சித் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

இருப்பினும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் 26 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற குமாரும் போட்டியிட்டாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட குமாா் 15 வாக்குகள் பெற்று தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்றாா்.

இதையடுத்து நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்களிக்காததால், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் 20 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.