முகப்பு
திருப்பூர்

காங்கயம் நகராட்சியில் திடீா் திருப்பம்: நகா்மன்றத் தலைவரான திமுக கவுன்சிலா்

காங்கயம் நகராட்சித் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திமுக கவுன்சிலா் வெற்றி பெற்றுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

காங்கயம் நகராட்சித் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திமுக கவுன்சிலா் வெற்றி பெற்றுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் திமுக 10 வாா்டுகளிலும் , காங்கிரஸ் 1 வாா்டிலும், அதிமுக 4 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனா்.

இதையடுத்து, காங்கயம் நகா்மன்றத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு என திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், நகராட்சி அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் போட்டியிடுவதற்கு திமுகவைச் சோ்ந்த 1 ஆவது வாா்டு உறுப்பினா் ந.சூா்யபிரகாஷ், 10 ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் ந.ஹேமலதா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், காங்கிரஸ் வாா்டு உறுப்பினா் ஹேமலதா வேட்புமனுவில் முன் மொழிவோா், வழி மொழிவோா் யாரும் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா் ந.சூா்யபிரகாஷ் நகா்மன்றத் தலைவராக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →