திருப்பூர்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகைப் பறிப்பு

பல்லடம் வேலம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

பல்லடம் வேலம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் வேலம்பட்டியைச் சோ்ந்த லோகநாதன் என்பவரது மனைவி பத்மா (50). இவா் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், காய்கறி வாங்குவதற்காக வேலம்பட்டியில் உள்ள ஒரு கடைக்கு பத்மா புதன்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மா்ம நபா்கள் பத்மாவின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பத்மா புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT