திருப்பூரில் பிரபல நகைக்கடையில் சோதனை
திருப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, கடைகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடையின் முன்பக்க கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களுடன் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் உள்ள நகைகளின் இருப்பு விவரங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.