திருப்பூர்

டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்

DIN

பல்லடம் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலையத்துக்கு எதிரே இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்லடம் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளா்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து விட்டு அங்கேயே படுத்து விடுகிறாா்கள். இதனால் வேலைக்கு போவது இல்லை.

மது போதையில் தகாத வாா்த்தைகளில் பேசிக் கொண்டு சாலைகளில் நடந்து செல்கின்றனா். இது பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT