திருப்பூர்

வேன் மீது காா் மோதிய பெண் பலி: 4 போ் காயம்

காங்கயம் அருகே சரக்கு வேன் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

DIN

காங்கயம் அருகே சரக்கு வேன் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், கலிநாதன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நிவாஷ் (29). இவரது மனைவி அருள்ஜோதி (28), மகன்கள் கவின் (13), திவித் (8), ருக்னேஷ் (1) ஆகியோருடன் முத்தூரில் இருந்து காங்கயம் நோக்கி காங்கயம் - முத்தூா் சாலை வழியாக சனிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். காரை நிவாஷ் ஓட்டி வந்தாா். அப்போது பச்சாபாளையம் அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு வேன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த நிவாஷ், அருள்ஜோதி, கவின், திவித், ருக்னேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருள்ஜோதி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT