திருப்பூர்

உடுமலையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

DIN

 உடுமலையில் முன்னறிவிப்பின்றி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய் கோட்டாட்சியா் கீதா தலைமையில் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் ஆகியோா் ஒருங்கிணைந்து பிஏபி வாய்க்கால்களின் கரைகளில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்தனா். இதில் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரனுக்கு சொந்தான தோட்டத்துக்கு கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனா்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிா்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி அண்ணா நகா் பகுதியில் உடுமலை-மூனாறு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து விவசாய பிரதிநிதிகள் - அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் துண்டிக்கப்பட்ட அனைத்து மின் இணைப்புகளை மீண்டும் கொடுக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனா்.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக உள்ள மின் இணைப்புகளை ஒரு வாரம் கழித்து முறைப்படி நோட்டீஸ் கொடுத்து துண்டிக்கவும் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால் தளி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT