திருப்பூர்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை: காங்கயத்தில் மரக்கன்றுகள் நடவு

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை 160 மரக்கன்றுகள் நடப்பட்டன.

காங்கயம் நகரம், கரூா் சாலைப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில் குறுவனம் அமைப்பதற்காக காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் துளிகள் தன்னாா்வலா் அமைப்பினருடன் இணைந்து முதற்கட்டமாக 160 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், திமுக காங்கயம் மேற்கு நகரப் பொறுப்பாளா் காயத்ரி பி.சின்னசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியைத் துவக்கிவைத்தாா்.

இதில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வக்குமாா், சுகாதார ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் துளிகள் அமைப்பின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT