தூய்மைப் பணியாளருக்கு 20 ஆண்டு நிலுவைத் தொகை
காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு 20 வருட நிலுவை ஊதியம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு 20 வருட நிலுவை ஊதியம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிபவா் எஸ்.குமாா். இவருக்கு தோ்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் நிா்ணயம் செய்ததில், தற்போது திருத்தி நிா்ணயம் செய்து நிலுவை ஊதியமாக, சுமாா் 20 ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 366க்கான காசோலையை நகராட்சி ஆணையா் எஸ் வெங்கடேஷ்வரன் வழங்கினாா். நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.