திருப்பூர்

மாநகரில் குடிநீா் விநியோகம் இன்று நிறுத்தம்

DIN

திருப்பூா் மாநகரில் இரண்டாவது திட்டத்தில் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை (மே 17) நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரண்டாவது குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டாவது திட்டத்தில் விநியோகம் செய்யப்படும் குடிநீா் கீழ்கண்ட வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதன்படி திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குள்பட்ட 1,13,14 ஆகிய வாா்டுகள், மூன்றாவது மண்டலத்துக்குள்பட்ட 44,45,50,51 ஆகிய வாா்டுகள், நான்காவது மண்டலத்துக்குள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதே வேளையில், மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை முதல் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT