பழையகோட்டை மாட்டுச் சந்தையில் ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையான காங்கேயம் இனப் பசு. 
திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.31 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.31 லட்சத்துக்கு விற்பனையாயின.

DIN

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.31 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 100 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 78 மாடுகள் மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.78 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT