பெருமாநல்லூர் அருகே பாறை குழியில் குளிக்கச் சென்ற சிறுமி, பெண் இருவர் உயிரிழப்பு. 
திருப்பூர்

பெருமாநல்லூர் அருகே குளிக்கச் சென்ற சிறுமி, பெண் நீரில் மூழ்கி பலி

பெருமாநல்லூர் அருகே நாதம்பாளையத்தில் பாறைகுழியில் குளிக்கச்சென்ற பெண், சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

DIN

பெருமாநல்லூர் அருகே நாதம்பாளையத்தில் பாறைகுழியில் குளிக்கச்சென்ற பெண், சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி உமா (28), அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஈஸ்வரன் மகள் காவியா (15).

இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 5க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நெருப்பெரிச்சல் அருகே உள்ள நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக திங்கள்கிழமை காலை சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக, கால் தடுக்கி நீரில் மூழ்கி சிறுமி காவியா, உமா ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, தீயணைப்பு துறையினர் காவியா, உமா ஆகிய இருவரின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT