முகப்பு
திருப்பூர்

ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஈசநத்தம், காசிபாளையம், எஸ்.புதூா், வல்லகுண்டாபுரம், சீத்தப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 47 விவசாயிகள் தங்களுடைய 745 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 36,631 கிலோ.

காங்கயம், நடுப்பாளையம், முத்தூரில் இருந்து 3 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

சூரியகாந்தி அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.79.89க்கும், குறைந்தபட்சமாக ரூ.57.86க்கும், சராசரியாக ரூ. 72.69க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 24.35 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.